வலைப்பந்து : Andy Murray விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச்(Đoković) தம்பதி!

வலைப்பந்து : Andy Murray விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச்(Đoković) தம்பதி!

ஜோகோவிச் (Đoković) மற்றும் அவரது மனைவி ஜெலீனா (Jelena Djokovic) இருவரும் சேர்ந்து வலைப்பந்து விளையாடி தொடர்ச்சியாக 100 முறை அடித்து பிருத்தானிய வீரர் ஆன்டி Murray விடுத்த சவாலில் ஜெயித்து காட்டியுள்ளார்.

பிருத்தானிய முன்னணி வலைப்பந்து வீரர் ஆன்டி முர்ரேவும், அவரது மனைவி கிம் சியர்சும் (Kim Cheers) சிறிய இடைவெளியில் நின்றபடி வலைப்பந்து மட்டையால் இடைவிடாது 100 தடவை அடித்து, அந்த காணொளி காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அத்துடன் இது மாதிரி தங்களது துணையுடன் இணைந்து 100 தடவைகள் அடிக்க முடியுமா? என்று ‘முதல்தர’ வலைப்பந்து வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்று ஜோகோவிச் தனது மனைவி ஜெலீனாவுடன் கைகோர்த்து வலைப்பந்து மட்டையை சுழட்டினார். தங்களது வீட்டு முற்றத்தில் நின்றபடி இருவரும் தொடர்ச்சியாக 100 தடவைகள் அடித்து சவாலில் ஜெயித்து காட்டினர். அந்த காணொளியை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோகோவிச், ‘100 ஷாட் சவால்” ஜெலீனாவுக்கு மிகவும் எளிதாக இருந்தது, ஜாலியாக அமைந்த இந்த சவாலுக்கு வித்திட்ட முர்ரே-கிம் தம்பதிக்கு நன்றி. அவர்களிடம் இருந்து தொடர்ந்து சவாலான விஷயங்கள் வெளிவர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் முர்ரேவின் சவாலை ஏற்றுக்கொள்ள பெடரர் (Roger Federer) தயங்குகிறார். தனது மனைவியும், முன்னாள் வீராங்கனையுமான மிர்கா ( Mirka Federer) சமூக வலைதளம் என்றாலே கூச்சப்படுவார் என்று ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பெடரர் பதில் அளித்திருக்கிறார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments