வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவால் மரணம்!

You are currently viewing வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் பதவியிருந்து தான் ஜூலை 31ஆம் திகதியுடன்விலகப்போவதாக கடந்த தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது. எனினும் அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைபெற்றுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments