வல்வெட்டியில் பட்டமாக பறக்கும் தமிழர்மானம்!

You are currently viewing வல்வெட்டியில் பட்டமாக பறக்கும் தமிழர்மானம்!

இனப்படுகொலை அரசாங்கத்தின் அனுசரணையுடன் யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை நடைபெறவுள்ளது.

நாமல் ராஜபக்சவை அமைச்சராக கொண்ட  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

 அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (யேஅயட சுயதயியமளய) இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை  கொழும்பில் இடம்பெற்றது. 

இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளாராம்.

 ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இம்முறை வழமைக்கு மாறாக தரகர் அங்கயன் ஏற்பாட்டில் பட்டத்திருவிழாவும் இனப்படுகொலை அரசினது அனுசரணையுடன் யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது. 

வீரம் வளைந்த மண்ணிலே 2009 இற்கு பின்னரான காலத்தில் கோளைகளும் கோணல் தமிழர்களும் விளைந்திருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments