வளசரவாக்கத்தில் இந்தியாகாட்டும் புலி பூச்சாண்டி, கைதாகும் ஈழத்தமிழர்கள்!!

You are currently viewing வளசரவாக்கத்தில் இந்தியாகாட்டும் புலி பூச்சாண்டி, கைதாகும் ஈழத்தமிழர்கள்!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள  ஈழத்தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக  ஈழத்தை  சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக   தேசிய பாதுகாப்பு முகமை கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த மாதம் மேலும் 2 பேரை கைது செய்தது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் , சென்னை, திருவள்ளூர், எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

​மேலும் இந்த சோதனை முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மொபைல் போன் சிம் கார்டுகள், உள்ளிட்ட 7  நவீன  ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய  குறிப்பு :-

 கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி மற்றும் 1,000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக தற்போது  வளசரவாக்கத்திலும் கைது நடந்துள்ளது  தங்களின்  பிராந்திய நலனுக்காக இந்தியா  நடத்தும்   புலி பூச்சாண்டியின் தொடக்கமாகும்  .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments