வளர்ப்பு மாட்டினை களவாடி இறச்சிக்காக வெட்டிய கும்பல்!

வளர்ப்பு மாட்டினை களவாடி இறச்சிக்காக வெட்டிய கும்பல்!

முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் வளர்ப்பு மாடு இறச்சிக்காக வெட்டப்பட்டு மாட்டின் தலை உள்ளிட்ட பகுதிகளை விட்டுச்சென்றுள்ளார்கள்.
முள்ளியவளைப்பகுதியில் வளர்ப்பு மாடு ஒன்று வெட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

(13.12.2020) இன்று காலை முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு அருகில் உள்ள பற்றைக்காட்டில் பசுமாடு ஒன்று அறுக்கப்பட்டு நான்கு கால்களையம் இறச்சிக்காக எடுக்கப்பட்டு தலையுடன் நெஞ்சுப்பகுதியினையும் விட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.

கால்நடைகளை இறச்சிகாக்க திருடும் சம்பவங்கள் முள்ளியவளைப்பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அறுக்கப்பட்ட மாட்டின் எச்சங்களை பார்வையிட்ட கிராம வாசிகள் சம்பவம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் இது யாருடைய மாடு இதனையார் வெட்டினார்கள் என்பது தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இதேவேளை மாட்டுஇறச்சியினை மான் இறச்சி என்றுசொல்லி விற்பனை செய்யும் கும்பல் ஒன்று முள்ளியவளை பொலீசாரால் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள