வவனிக்குளக் கட்டில் வாகனம் தடம் புரண்டதில் தந்தை மகள் உள்ளிட்ட மூவர் பலி!

You are currently viewing வவனிக்குளக் கட்டில் வாகனம் தடம் புரண்டதில் தந்தை மகள் உள்ளிட்ட மூவர் பலி!

முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டடில் கப் வாகனம் தடம் புரண்ட விபத்தில் 37 அகவை தந்தை 3 அகவை மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று(19.20.20) மாலை வவுனிக்குளம் குளக்கட்டு ஊடாக பயணித்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
மல்லாவி செல்வபுரம் பகுதியினை சேர்ந்தவர்கள் கப் வாகனத்தில் சென்றபோது  வாகனம் குளத்தில் வீழ்ந்துள்ளதால் வாகனத்தில் பயணம் செய்த நால்வரும் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது 13 அகவை சிறுவன் நீரில் இருந்து தப்பித்துள்ளார் சம்பத்தினை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த மக்கள்,படையினர்,பொலீசார்,முழுமையான முயற்றி மேற்கொண்டு குளத்தில் இருந்த வாகனத்தினை மீட்டுள்ளதுடன் இதன்போது செல்வபுரத்தினை சேர்ந்த ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளான்.
இன்னிலையில் வானகத்தில் பயணித்த சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை  நேற்று (19) இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து படையினர்,பொலீசார்,பிரதேச சபையினர்,பிரதேச செயலகத்தினர் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் தொடர்ச்சியாக இரவு இரவாக நின்று கடற்படையினரின் உதவியுடன் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள