வவுனிக்குளத்தில் நடந்த அனர்த்தம் மூவர் பலி!

வவுனிக்குளத்தில் நடந்த அனர்த்தம் மூவர் பலி!

முல்லைத்தீவு வவுனிக்குளம் குளக்கட்டில் மகேந்திரா வாகனம் ஒன்று தடம் புரண்டு குளத்திற்குள் வீழ்ந்ததில் ஒருவர் பலி இருவுரை காணவில்லை.

இன்று மாலை வவுனிக்குளம் குளக்கட்டு வீதியில் பயணித்த மகேந்திர வாகனம் ஒன்று குளக்கட்டில் தடம் புரண்டு குளத்தில் வீழ்ந்துள்ளது.
இதில் பயணித்த சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும்; நடவடிக்கையில் பொலீசார்,படையினர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனத்தில் விபத்திற்குள்ளான மற்றும் ஒரு சிறுவன் நீத்தி கரைசேர்ந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள