வவுனிக்குளத்தில் படகு கவிழந்து இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

You are currently viewing வவுனிக்குளத்தில் படகு கவிழந்து இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் தந்தையுடன் மீன்பிடியில் ஈடுபட்ட 23 வயது இளைஞர், படகு கவிழந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் நடந்துள்ளது. வி.நிலவன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மீன்பிடியில் ஈடுட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததால் தந்தையும், மகனும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இளைஞர் போதியளவு நீச்சல் தெரியாமையால் நீரில் மூழ்கியுள்ளார். கரையில் இருந்தவர்கள் இதனை அவதானித்துக் காப்பாற்ற முயன்றபோதும், இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறீலங்கா காவல்த்துறையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments