வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில், இன்றையதினம் (28) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகினார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments