வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

You are currently viewing வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதி படுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் மஸ்கலியா பகுதியை சேர்ந்த பிரவீன் வயது 21 என்ற இளைஞரே இறந்துள்ளார்.

விபத்துதொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments