வவுனியாவில் இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

வவுனியாவில் இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இரு குடும்பத்தினர் வவுனியா பூந்தோட்டம் சிறிநகரில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிவரும் பெண்ணொருவர் கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்ற நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனொரு கட்டமாக, புங்குடுதீவில் பிறந்த நாள் நிகழ்வொன்றில் குறித்த பெண் கலந்துகொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியாவை சேர்ந்த இரண்டு குடும்பத்தினரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான  பி.சி.ஆர். பரிசோதனைகள் சுகாதாரப் பிரிவினரால் இன்று காலை எடுக்கப்பட்டுள்ளன.7Shares

பகிர்ந்துகொள்ள