வவுனியாவில் கடும் சூறாவளி வீடுகள் சேதம்!!

வவுனியாவில் கடும் சூறாவளி வீடுகள் சேதம்!!

வட தமிழீழம் , வவுனியா கணேசபுரத்தில் வீசிய கடும் காற்றினால் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டமையால் வீடுகளிற்குள் தண்ணீர் சென்றுள்ள நிலையில் மக்கள் இருப்பதற்கு வசிப்பிடமின்றி அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை பலமான காற்று வீசியதால் வாழை, தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இதேவேளை, பாதிப்பு விபரங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments