வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!! -உடல் முழுவதும் பாரிய காயங்கள்!!

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!! -உடல் முழுவதும் பாரிய காயங்கள்!!

வவுனியான விளாத்திக்குளம் பகுதியில் உள்ள காட்டிற்கு தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த சிறிரங்கன் வியேந்திரன் (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- 

குறித்த நபர் காட்டுப்பகுதிக்கு சென்று கடந்த இரண்டு தினங்களாக வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காட்டுப்பகுதியில் அவரைத்தேடியுள்ளனர்.

இதன்போது காட்டுப்பகுதியில் பாரிய காயங்களுடன் சடலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மடு காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்த்துறையினர் சடலத்தினை மீட்டு  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இவர் தேன் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றநிலையில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments