வவுனியாவில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியாவில் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார்
இதன்போது மரத்துடன் தவறுதலாக மோதி அருகிலிருந்த கிணற்றிற்குள் விழுந்து மூழ்கி சாவடைந்துள்ளார்
ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் விஜயகுமார் (41) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்
அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள