வவுனியாவில் கேரளக் கஞ்சாவுடன் 18 வயது இளைஞன் கைது!

வவுனியாவில் கேரளக் கஞ்சாவுடன் 18 வயது இளைஞன் கைது!

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவாகை பகுதியில் இன்று அதிகாலை கேரளக் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே துட்டுவாகை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது 250 கிராம் கேரளக் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

பகிர்ந்துகொள்ள