வவுனியாவில் சிறுவர்கள் நால்வர் உட்பட 18 பேருக்கு கொரோனா!

You are currently viewing வவுனியாவில் சிறுவர்கள் நால்வர் உட்பட 18 பேருக்கு கொரோனா!

வவுனியா மாவட்டத்தில் நேற்யை தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுவர்கள் நால்வர் உட்பட மேலும் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் வவுனியா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட அடிப்படையில் இனம்காணாப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் பெறப்பட்டிருந்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த மாதிரிகளின் முடிவுகள் நேற்று (மே-29) இரவு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், சிறுவர்கள் நால்வர் உட்பட 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 04 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நால்வரில் 2 மற்றும் 9 வயது சிறுவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாறம்பைக்குளம் சிறிராமபுரம் பகுதியில் சிறுவர்கள் இருவருக்கு (3 வயது மற்றும் 8 வயது) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிவந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று,

தவசிக்குளம் பகுதியில் – ஒருவர்

நவகமுவ பகுதியில் – ஒருவர்

ஒருவருக்கும் பகுதியில் – ஒருவர்

திருவேகம பகுதியில் – ஒருவர்

நெடுங்குளம் பகுதியில் – ஒருவர்

தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் – ஒருவர்

ஆச்சிபுரம் பகுதியில் – ஒருவர்

பெரிய கோமரசன்குளம் பகுதியில் – ஒருவர்

வவுனியா சிறைச்சாலையில் – இருவருக்கு (கைதி ஒருவருக்கும் உத்தியோகத்தருக்கும்)

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் – ஒருவர்

ஆகிய 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழ்.குடாநாட்டில் புதிதாக மேலும் தொற்றாளர்கள் பத்துப் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரவு (29) யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரன்.

அவர்களில்

காரைநகர் பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர், 13 வயதுடைய சிறுவன் ஒருவர் உட்பட்ட 05 பேரும் (03 பேர் காரைநகர் பிரதேச வைத்தியசாலை, 02 பேர் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு)

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர் (16 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடக்கம்)

யாழ்.சிறைச்சாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்த 100 பேர் நேற்று புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments