வவுனியாவில் தீப்பந்தப் பேரணி!

You are currently viewing வவுனியாவில் தீப்பந்தப் பேரணி!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால், தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை, வவுனியா- கந்தசாமி ஆலயத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி, மணிக்கூட்டுகோபுர சந்தியினை அடைந்து, அங்கிருந்து கண்டி வீதி வழியாக பழையபேருந்து நிலையப் பகுதியை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “நீதி கிடைக்கும் வரை போரோடுவோம்”, “நீதியில்லாத நாட்டில் நீதிமன்றம் எதற்கு” போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தீப்பந்தப் பேரணி! 1
வவுனியாவில் தீப்பந்தப் பேரணி! 2
வவுனியாவில் தீப்பந்தப் பேரணி! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments