வவுனியாவில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

வவுனியாவில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை இன்று (15) புதன்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

டவாலிகா பிரபாகரக்குருக்கள் என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை அவர்கள் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் வவுனியா காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments