வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13.09.2020 இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில்,

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments