வவுனியாவில் மகனைத்தேடிய தாய் மரணம்!! தொடரும் துயரம்!!

You are currently viewing வவுனியாவில் மகனைத்தேடிய தாய் மரணம்!! தொடரும் துயரம்!!

வவுனியாவில் காணாமல் போன  தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாயி வயது 78 என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 
இவரது வளர்ப்புமகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். 
அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு  போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். 
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மகனைத்தேடிய தாய் மரணம்!! தொடரும் துயரம்!! 1
வவுனியாவில் மகனைத்தேடிய தாய் மரணம்!! தொடரும் துயரம்!! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments