வவுனியாவில் மட்டு எருவில் இருந்து வெளியான விசவாய ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் மட்டு எருவில் இருந்து வெளியான விசவாய ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, சேமமடு பகுதியில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் பல மாதங்களாக குவிக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தினை பாரவூர்த்தி ஒன்றில் சிலர் ஏற்றியுள்ளனர். இதன்போது சாணத்தை ஏற்றிய இளைஞர் ஒருவர் இளைப்பாறுவதற்காக குறித்த சாணிக் கும்பத்தின் மேல் இருந்துள்ளார்.

இதன்போது மாட்டு கழிவில் இருந்து தாக்கிய விசவாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் ஓமந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவசர சிகிச்சையளிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் குறித்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments