வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம்!

You are currently viewing வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம்!

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேரமாக குறித்த இளைஞர்குழு அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டதுடன், வீதியின் குறுக்கே தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அத்துடன் அவர்களது தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் அப்பாதையூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த நிலையில் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி, மன்னார் வீதி  ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments