வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியா- கரப்பன்காட்டு பகுதியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி முன்னாள் போராளி ஒருவர், படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான ஈழம் எனப்படும் வி.விநோதரன் என்பவரே இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவராவார்.

வவுனியா – கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்துக்குள் நேற்றிரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள், முன்னாள் போராளி மீது தாக்குதல் நடத்தி அவரைப் படுகாயப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அந்த அலுவலகத்தில் இருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் அவர்கள் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வவுனியா சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments