வவுனியாவில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் மூவர் கைது!

வவுனியாவில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் மூவர் கைது!

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் ஆயர்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினரால் வவுனியா பேருந்து நிலையத்தினை அண்மித்த பகுதியில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாகவும் இதனை கட்டுப்படுத்த பொலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எழுத்துமூலம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments