வவுனியாவில் விபத்து இருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் விபத்து இருவர் உயிரிழப்பு!

வவுனியா கொறவப்பொத்தானை வீதி ஆறாம்கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்

வவுனியாவில் இருந்து கெப்பிட்டிகொல்லாவை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் குறித்த நபர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வண்டி,

வீதி ஒரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கெப்பிற்றிகொல்லாவை பகுதியை சேர்ந்த இருவரே மரணமடைந்துள்ளதுடன் அவர்களது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.

சம்பவம் தொடர்பாக மடுகந்தை காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments