வவுனியாவில் வீட்டின் மீது தாக்குதல் நாய்குட்டிகள் கொள்ளை!

வவுனியாவில் வீட்டின் மீது தாக்குதல் நாய்குட்டிகள் கொள்ளை!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச் செல்லப்பட்டுளது.

இன்றயதினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார்சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவினர் மறைகாணி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments