வவுனியாவில் 17 மாணவர்கள் உள்ளிட்ட 47 பேருக்கு தொற்று!

You are currently viewing வவுனியாவில் 17 மாணவர்கள் உள்ளிட்ட 47 பேருக்கு தொற்று!

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர், தாமாக முன்வந்து பரிசோதனை செய்தோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகளின் ஒரு தொகுதி நேற்று இரவு 9 மணிக்கு வெளியாகின.

அதில் வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம், பூவரசன்குளம், அம்பலாங்கொடவல உள்ளிட்ட பகுதிகளிலேயே மாணவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வயது, இரண்டரை வயது, 5 வயது குழந்தைகளும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை சிகிச்சைக்காக தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments