வவுனியா கொரோனா தடுப்பு முகாமுக்கு 265 பேர் கொண்டு வரப்பட்டனர்!

வவுனியா கொரோனா தடுப்பு முகாமுக்கு 265 பேர் கொண்டு வரப்பட்டனர்!

வவுனியா- பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமுக்கு, இன்று மாலை 7 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வந்த பலர் பேரூந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் தடுத்து வைத்து தனிமைப்படுத்தல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பேருந்துகளில் 265 விமானப் பயணிகள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு சோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments