வவுனியா நகரில் ஒரு வாரத்தில் 151 பேருக்கு கொரோனா!!

You are currently viewing வவுனியா நகரில் ஒரு வாரத்தில் 151 பேருக்கு கொரோனா!!

வவுனியா நகர்ப்பகுதிகளை சேர்ந்த மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது. இதன்காரணமாக வவுனியா நகர்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 151 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள