வவுனியா பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் கடும் விசாரணை!

வவுனியா பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் கடும் விசாரணை!

வவுனியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியரிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்  திங்கக்கிழமை  விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் வெளியான செய்தி ஒன்று தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே பத்திரிகையின் பணிப்பாளர், அவரின் மனைவி மற்றும் பிரதம ஆசிரியரை பயங்கரவாத குற்றத்தடுப்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனது மனைவியின் சுகவீனம் காரணமாக கொழும்பிற்கு செல்ல முடியாது என அறிவித்த பின்னர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் வவுனியாவிற்கு சென்று விசாரணை நடத்தியதாக குறித்த பத்திரிகையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் தன்னிடமும் தனது மனைவியிடமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பத்திரிகையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments