வவுனியா விபத்தில் மூவர் காயம்!

வவுனியா விபத்தில் மூவர் காயம்!

வவுனியா – ரயில் நிலைய வீதியில் இன்று காலை 11.00 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் வண்டி வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் வண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இரு பெண்களும் ஒரு சிறுவனும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 1990 அவசர உயிர் பாதுகாப்பு காவு ஊர்தியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of