வவுனியா வேப்பங்குள கிணற்றில் ஆணின் சடலம்! 

You are currently viewing வவுனியா வேப்பங்குள கிணற்றில் ஆணின் சடலம்! 

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சுத்திகரிப்பு மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலத்தினை நெளுக்குளம் சிறீலங்கா காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

தடவியல் சிறீலங்கா காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments