வவுனியா வைத்தியசாலையில் சமூக பரவல் இல்லை!

வவுனியா வைத்தியசாலையில் சமூக பரவல் இல்லை!

வவுனியா வைத்தியசாலையில் கோவிட்-19 சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டிருந்தனர்.

அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலை பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்றுவருகின்றது.

ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளேஅனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. என்றார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments