வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலி

You are currently viewing வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேருநுவர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7வயதான குழந்தை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முச்சக்கர வண்டியில் வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வருகின்றபோது கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி முச்சக்கர வண்டியின் மீது மோதியதால் இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் திருமதி. பாமினி ஞானவேல் வயது 51 என்பவரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை சேருவில சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments