வாகரை சிறீலங்கா பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பெண் தட்டமுனை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் மின்விசிறி கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.






