வார இறுதியில் மட்டும் 37,900 புதிய விண்ணப்பங்கள்! : NAV

You are currently viewing வார இறுதியில் மட்டும் 37,900 புதிய விண்ணப்பங்கள்! : NAV

வெள்ளி முதல் ஞாயிறு வரை, வேலையின்மை நல ஊதியத்துக்காக சுமார் 38,000 புதிய விண்ணப்பங்களை NAV பெற்றுள்ளது. பெரும்பாலானவை, 34,500 விண்ணப்பங்கள், பணிநீக்க நல ஊதியத்துக்கான விண்ணப்பங்களே என NAV செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

NAV இப்போது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களையும், கேள்விகளையும் பெற்று வருகின்றது. இப்போது, மக்கள் தங்கள் பணிநீக்க நல ஊதியத்தைப் பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றோம் என NAV மேலும் கூறியுள்ளது.

எண்ணியல் (digitale) சேவைகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் nav.no ஐப் பார்வையிட்டு அங்கு தங்கள் சந்தேகங்கள்/ கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும், மேலும் பாவனையாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தகவல்களை எங்களால் முடிந்தவரை விரைவாக புதுப்பிக்கிறோம் என்றும் தொழிலாளர் மற்றும் நலன்புரி இயக்குநர் (arbeids- og velferdsdirektør) Sigrun Vågeng கூறியுள்ளார்.

மேலதிக விபரம்: VG

பகிர்ந்துகொள்ள