வாள்வெட்டு றவுடி கைது!

You are currently viewing வாள்வெட்டு றவுடி கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் காவல்த்துறை பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செப்ரெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தமை, நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீட்டுக்குள் புகுந்து இளைஞனையும் தாயாரையும் தாக்கியமை,கச்சேரியில் ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபரான சுமன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளில் தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள