வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதி!

You are currently viewing வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதி!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதி ஒருவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் யுவதியைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர், 1990 அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் யுவதியை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

யுவதி வேறொரு பிரதேசத்திலிருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் மட்டக்களப்பு சிறீலங்கா தலைமையகக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply