விக்டர் குழுவினை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

விக்டர்  குழுவினை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து இயங்கி வந்த விக்டர் குழுவினை சேர்ந்த மற்றும் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.


முல்லைத்தீவு மாட்டத்தில் சட்டaவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த விக்டர் குழு தொடர்பில் பொலிசார் கூடுதல் அவதானம் செலுத்தியிருந்தனர்.


மக்கள் மத்தியில் காணப்படும் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் செயற்பட்டுவந்த குறித்த குழுவின் பிரபல உறுப்பினர் ஒருவரை கடந்த 06 ஆம்திகதி சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இன்னிலையில் அதே குழுவினை சேர்ந்த மற்றும் ஒருவரை 09.09.2020 அன்று மாமூலைப்பகுதியில்வைத்து சிறப்பு அதிரடிப்படையினர்  கைதுசெய்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளார்கள் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments