விசேட சேவை யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு !

தற்போது நிலவும் ஊரடங்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் (Clinic) சிகிச்சை பெறும் நீண்டகால தொற்றா நோயாளர்கள் அனைவருக்கும் யாழ்.போதனாவைத்திய சாலை நிர்வாகத்தினர் விசேட சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் உங்கள் கிளினிக் அட்டை இலக்கம், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை 0212222268 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிப்பதன் மூலம் உங்களுக்கான மருந்துப் பொருட்கள் வீட்டிற்கே தபால் மூலம் அனுப்பிவைக்கப் படும்.

இதற்கென பாதுகாப்பான விசேட தபால் சேவை ஒன்று இயங்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை தெரிந்தவர்களுக்கும் அறியத்தருமாறும் கேட்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments