விடுதலைத்தீ ஒன்பதாம் நாள்!

You are currently viewing விடுதலைத்தீ ஒன்பதாம் நாள்!

தமிழீழ விடுதலையின்
திசைகாட்டி!
அமைதிவழியை நீ காட்டி!
அகிம்சையைப்போரை நீ மூட்டி!
அமைதிப்படையின் கோரமுகம் காட்டி!
அண்ணன் வழியில் பட்டினித்
தீ மூட்டி!
அறப்போரினை அவனியில்
நிலைநாட்டி!
அசையாத உறுதியினை நெஞ்சிலே தீட்டி!
கலையாத கனவினை
உயிரிலே ஏற்றி!
ஒன்பது நாட்களாய்
வயிறு ஒட்டி!
அணுவணுவாய்
வலிகளை நீ தாங்கி!
இனத்தின் விழிகளில்
கண்ணீராய் நீ தேங்கி!
கவிதைகளும் உரைகளும்
உனக்காக முழங்கி!
பாரதத்தோடு தேசியத்தலைவர்
பேச்சு வார்த்தையில்
இறங்கி!
மனிதம் கனிந்து
உனைத் காக்குமென
ஏங்கி!
இரவு வந்த செய்தி
இந்தியாவின்
இரக்கமில்லா
வாய்மொழி!
எழுத்து வடிவில்
எதுவும் தரவிரும்பாத
கந்திதேசம் கருணையில்லா
மனநிலை!

இன்றாவது மருத்துவனைக்கு
பார்த்தீபனை கொண்டுபோகலாமென்ற
அங்கலாய்ப்பு
வெங்கொடுமைச்
சாக்காட்டில்
சரிந்தது!

✍தூயவன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments