விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி கைது!

You are currently viewing விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி கைது!

முன்னாள் போராளிகள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் நாகலிங்கம் பிரதீபன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போரதீவு பிரதேசத்தில் வைத்து இன்று மாலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் கூறியுள்ளளனர்.

இவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிறீலங்கா காவல்த்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments