விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் – முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர்

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் – முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர்

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என உள்துறை அமைசகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புத்ராஜெயாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகயவியலாளர் தொடுத்த கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிருந்து நீக்கலாம் என இன்றைய பிரதமரும் முன்னாள் உள்துறை அமைசருமான மொகிதீன் யாசினுக்கு எழுதியதாக  முன்னாள் பிரதமர் துன் கலாநிதி மகாதீர் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார். 

குறித்த கடிதத்தை கடந்த சனிவரி மாதம் 12 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. இலங்கையில் அவர்களின் போராட்டம் நடந்தது. மலேசியாவில் அவர்களின் போராட்டத்திற்கு தொடர்பில்லை. அவர்கள் மலேசியாவில் தறவான செயற்பாடுகளில் ஈடுபடாதபோது அவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழவில்லை என்றார்.

ஏனைய நாடுகள் போன்று மலேசியாவும் எந்தவொரு அமைப்பையும் இலகுவாக பயங்கரவாத முத்திரை குத்திவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஹமாஸ் இயக்கத்தை சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்காதபோது நாங்கள் ஏன் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

விதலைப் புலிகள் மலேசியாவில் நிதி திரட்டியிருக்கலாம். அந்த அமைப்பு முன்னரே திதி திரட்டியதாக அவர் சுட்டிக்காட்டினார். 

ஏன் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள் என்றும் வைத்திருப்பதற்கு ஏதுவித காரணங்களும் இருப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஹமாஸ் இயக்கத்தை அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே என்னுடைய நண்பர் என்ற வகையிலேயே அவர் மலேசியாவுக்கு வந்தபோது சந்தித்தேன். எனது நண்பரை தீவிரவாதி என்று என்னால் குறிப்பிட இயலாது என்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்குவதுதான் நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments