பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா???

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியதா???

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.

உண்மையில் என்ன நடந்துள்ளது? தடை நீங்கி விட்டதா? இது பற்றி எமது சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

  1. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு 2001 ஆம் ஆண்டு பிரித்தானிய உள்துறை செயலர் எடுத்த முடிவு சரியானது என்று தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையம் (Proscribed Oranisations’ Appeals Commission) தெரிவித்துள்ளது.
  2. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறை செயலர் முன்வைத்திருக்கும் காரணங்களில் குறைபாடுகள் (flaws) இருப்பதாக ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
  3. இதன் அர்த்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உடனடியாக நீங்கியது என்பதல்ல
  4. தடையை நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. ஆனால் அவ்வாறான உத்தரவை அது இன்றைய தீர்ப்பில் பிறப்பிக்கவில்லை.
  5. இன்றைய தீர்ப்பின் விளைவாக இரு தரப்புக்கும் (வழக்குத் தொடுநருக்கும், பிரித்தானிய அரசாங்கத்திற்கும்) என்ன நிவாரணம் (relief) வழங்குவது என்பது பற்றிப் பிறதொரு அமர்வு/விசாரணை ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
  6. ஆக ஆணையத்தின் தீர்ப்பால் உடனடியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீங்கவில்லை.
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments