விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!

விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!

சிறைச்சாலைகளில் சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் இல்லை எனவும் இதன்காரணமாக தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில்,“தற்போதைய சூழ்நிலையில் எமது விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வினயமாய் வேண்டுகிறோம்.

தற்போது கொரோனா அதிகமாகமாய் பரவுகின்றது. சிறையில் சரியான சுகாதார வசதியில்லை. மருத்துவ பரிசோதனை சரியாக நடைபெறுவது இல்லை.

நாம் இங்கு 17,19,மற்றும் 20 வருடங்களாக மிக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். குடும்பத்தை பிரிந்து அதிக காலம் சிறையில் வாடுகின்றோம்.

தயவு செய்து இந்தநிலை கவனத்தில் எடுத்து எம்மை விடுதலை செய்வதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா தொற்று எம்மை தாக்குவதற்கான சந்தர்ப்பம் சிறையில் அதிகம் இருப்பதால் விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments