விண்வெளி பாதுகாப்பு படை அமைக்கும் ஜப்பான்!

விண்வெளி பாதுகாப்பு படை அமைக்கும் ஜப்பான்!

அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளில் குறுக்கிடவும், அவற்றை அழிக்கும் தொழில்நுட்பங்களை சீனா, ரஷியா ஆகிய நாடுகள் உருவாக்கி வருவதும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

எனவே, விண்வெளியில் ஜப்பானின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டின் வான் பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக விண்வெளி பாதுகாப்புப் படை உருவாக்கப்படும். டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் வரும் ஏப்ரல் முதல் செயல்பட தொடங்கும் இப்படை, அமெரிக்க விண்வெளி படையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் ஷின்சோ அபே தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments