விபத்தில் சகோதரிகளின் கணவன்மார் மரணம்!

விபத்தில் சகோதரிகளின் கணவன்மார் மரணம்!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செட்டிகுளத்திற்கு மரண சடங்கிற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 36 மற்றும் 38 வயது இளைஞர்களே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள