விபத்தில் சிறுவர்களின் தந்தையும் பலி!

விபத்தில் சிறுவர்களின் தந்தையும் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் நேற்றிரவ இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பளையின் இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரும்  டிப்பரும் மோதியதாலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது

சம்பவத்தில் பளையைச் சேர்ந்த 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்களே உயிரிழந்திருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதும் அவரும் உயிரிழந்துள்ளார்.

இன்னும் உரிமம் மாற்றப்படாத டிப்பர் வாகனத்திற்கு சொந்தக்காரரே விபத்தில் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள