விபத்தில் நகரசபை ஊழியர் மரணம்!

விபத்தில் நகரசபை ஊழியர் மரணம்!

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா நகரசபையில் பணிபுரியும் 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந் நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியிருந்தார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்

பகிர்ந்துகொள்ள