விமானப்படையின் PT6 விமானம் விபத்து!

விமானப்படையின் PT6 விமானம் விபத்து!

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது.

அதில் பயணித்த பயிற்சி விமானி உயிரிழந்துள்ளார்.

விமானி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக இலங்கை விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார்.

சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஆராய விமானப்படை தளபதியினால் விசேட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments